Monday, June 7, 2010

இலக்கியத்தின் போலி முகங்கள்.

ஒரு தனி மனிதனின் வாழ்க்கை, அடக்கு முறைகளையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்து போராடுவதோடு மட்டும் இல்லாமல்; அவனால் அல்லது அவன் சமுகத்தால் பெறப்பட்ட உரிமைகளையும், கடமைகளையும் மற்றும் பொறுப்புகளையும் ஒறிங்கினைத்து சக மனிதனின் வாழ்க்கையோடு வாழும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.இத்தகைய தனி மனிதனின் வாழ்க்கைக் கூறுகளின் சங்கமம் தான் இலக்கியம். இலக்கியம் என்பது மகா சமுத்திரம். இதில் பல நதிகள் மட்டுமே, சங்கமம் கொள்ளலாம். குறுகிய சிந்தனையும், சத்திய சங்கிலிப் பிணைப்பும் இலக்கியமாகாது. வான்மறை வள்ளுவமான திருக்குறள், அனைத்து தரப்பு மக்களுக்கும் கலங்கரை விளக்காக வழிக்காட்டி தமிழ் இலக்கியத்திற்கு அணி செய்கின்றது.